தேசிய கொடியை ஏற்றினால் மட்டும் நாம் நல்ல குடிமகனாக ஆகி விடமாட்டோம்..! கவிஞர் வைரமுத்து

By Ajmal KhanFirst Published Aug 12, 2022, 3:55 PM IST
Highlights

ஆகஸ்ட் 15, ஜனவரி 26 மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்து விட்டால் தேசத்தின் சிறந்த குடிமகனாகி விடமாட்டோம் 365 நாளும் நாம் தேசத்தின் குடிமகன் என்ற அக்கரையை மக்கள் மனதில் எழுப்புவது தான் இந்த தேசத்தின் முதற்கண் கடமையாக இருக்க கூடும்  என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 

புத்தகம் வாசிப்பு குறைந்ததா?

சென்னை கே.கே நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து,  போதைப் பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று தமிழக அரசு கவலைப்படுகிறது.  நாம் புதிய போதையை உருவாக்கினால் தவிர அந்தப் பழைய போதையை அழிக்க முடியும் என்று கூறிய அவர், அந்த புதிய போதை வாசித்தல், கற்றல், படித்தல் என்னும் இந்த புதிய போதையை இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு உண்டாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என தெரிவித்தார். கல்வி கற்ற சமுதாயமும் கற்றுக் கொண்டிருக்கிற சமுதாயமும் தான் ஒரு மனித வளத்தை உண்டாக்கக்கூடிய சமுதாயமாக திகழக்கூடும் என்று தெரிவித்தார்.வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று யாரும் கவலைப்பட வேண்டாம் குறைந்துவிட்டது என்று புலம்ப வேண்டாம், வாசிக்கும் பழக்கம் வேறு வேறு வடிவங்களில் மிகுதியாகி கொண்டு இருக்கிறது என கூறினார்.

உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி ஏன் இல்லை.!நானும் பீஃப் சாப்பிடுபவன் தான்.!-மா.சுப்பிரமணியன் புதிய விளக்கம்

இல்லம் தோறும் தேசிய கொடி

மேலும் அண்மையில் பத்திரிக்கையில் ஒன்றில்  உலக நாடுகள் வாரத்தில் எத்தனை மணி நேரம் வாசிப்பிற்கு நேரத்தை செலவழிகின்றன என்ற புள்ளி விவரம் வெளியாகியிருந்தது. அதில் ஜப்பான் வாரத்திற்கு 4.16 நிமிடங்கள் மட்டும் தான் வாசிக்க செலவழிக்கிறது என்றும் இங்கிலாந்து 5.18 மணி நேரம் வாசிக்க செலவிழிப்பதாகவும், அமெரிக்கா 5.48 மணி நேரம் செலவடுகிறது என்றும் இந்தியா வாரத்தில் வாசிப்புக்கு 10.4 மணி நேரம் செலவிட்டு உலகத்தில் வாசிப்பில் முன்னணியில் இந்தியா இருக்கிறது. இதை நாம் வளர்க்க வேண்டும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வைரமுத்து. இல்லம்தோறும் தேசியக்கொடியை ஏற்றுவது நல்ல திட்டம் தான் தேசியக்கொடியை சுதந்திர திருநாள் அன்று மட்டும் ஏற்றுவது சிறந்தது என்று  கருதி விட முடியாத, ஆகஸ்ட் 15, ஜனவரி 26 மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்து விட்டால் தேசத்தின் சிறந்த குடிமகனாகி விடமாட்டோம் 365 நாளும் நாம் தேசத்தின் குடிமகன் என்ற அக்கரையை மக்கள் மனதில் எழுப்புவது தான் இந்த தேசத்தின் முதற்கண் கடமையாக இருக்க கூடும் என கருதுவதாக வைரமுத்து கூறினார்.

ராணுவத்தில் சேர்வது லட்சுமணனின் கனவு...! கதறி அழும் தாய்.. சோகத்தில் மூழ்கிய டி.புதுபட்டி கிராமம்
 

click me!