வேலூரில் தண்ணீர் பம்பை மறைத்து கால்வாய் கட்டியவர் அதிமுகவை சேர்ந்தவர்...! துரைமுருகன் கூறிய பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Aug 12, 2022, 3:04 PM IST
Highlights

தமிழக அரசு அனுப்பிய மசோதாவை நீண்ட நாட்கள் நிலுவையில் வைப்பது ஜனநாயகத்திற்கு புறம்பானது என  நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

வேலூரில் பைக் மீது சாலை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் சாலை அமைத்தல், கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் வேலூர் மெயின் பஜார் தெரு அருகே காளிகாம்மாள் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சாலை போடப்பட்டு இருந்தது. இதனால் பைக் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.  இதனையடுத்து 2 மணி நேரம் போராடி, சிமென்ட் கலவையை உடைத்து பைக்கை எடுத்தனர்.

தண்ணீர் பம்பை மறைத்து கால்வாய்

இந்த நிலையில் மீண்டும் இதேபோன்ற நிகழ்வு அரங்கேறியது. வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில், அடி பம்ப்பை அகற்றாமலேயே, அதன் மீதே கால்வாய் கட்டப்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் பைப்பில் இருந்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, ஒப்பந்தாரரின் டெண்டர் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணியின் முதல் ஒப்பந்ததாரரான சுரேந்தர் பாபு என்பவர் மீது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்த சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டார்.

ராணுவத்தில் சேர்வது லட்சுமணனின் கனவு...! கதறி அழும் தாய்.. சோகத்தில் மூழ்கிய டி.புதுபட்டி கிராமம்

மசோதா மீது நடவடிக்கை

இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதி மொழி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலையின் உள்ள போர்வெல்லுடன் கால்வாய் அமைத்தவர்கள் அதிமுக ஒப்பந்ததாரர்கள் அவர்களுக்கு ஒப்பந்தத்தில் முன் அனுபவமில்லை,  இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்க கூடாது. நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு முறைக்கு, இருமுறை நிறைவேற்றிய மசோதாக்களை வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது. எனவே தமிழக ஆளுநர்  சட்டத்தை உணர்ந்து நீட் தேர்வு உள்ளிட்ட மசோதாக்களில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.


இதையும் படியுங்கள்

உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி ஏன் இல்லை.!நானும் பீஃப் சாப்பிடுபவன் தான்.!-மா.சுப்பிரமணியன் புதிய விளக்கம்

click me!