Chennai Rain :மக்களே உஷார்… சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய ‘கனமழை’...

By Raghupati RFirst Published Dec 28, 2021, 10:31 AM IST
Highlights

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் நவம்பர் மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மாத தொடக்கத்திலும் ஒரு சில இடங்களில் சில நாள்கள் மழை பெய்தாலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்றும் நாளை, நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திலும் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 27ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 28, 29 ) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். 

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்’ என்று அறிவித்து இருக்கிறது. இன்று காலை முதல் தற்போது வரை சென்னை சென்ட்ரல், எழும்பூர் , புரசைவாக்கம், வியசார்பாடி, வள்ளலார் நகர், எம்.ஆர்.சி. நகர், சாந்தோம், எக்மோர் மற்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

click me!