தமிழகத்தில் 3 நாட்கள் தடை... இந்த ஊர்களுக்கு போயிடாதீங்க மக்களே... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு !

By Raghupati R  |  First Published Dec 28, 2021, 7:56 AM IST

தமிழகத்தில் ஒமைக்கிரான் அச்சத்தால் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.


தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாதம் முதலில் ஒமைக்கிரான் என்ற புதிய உருமாறிய கொரோனா ஒன்று கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பு இதைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.3 மடங்கு வரை வேகமாகப் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பல நாடுகளில் ஒமைக்கிரான் கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்கிரான் வைரஸ் பரவி வரும் நிலையில், தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு முறைகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படும். ஒமைக்ரான் பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், கேரளாவில் டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணிக்கு பிறகு எந்தவித கொண்டாட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் விரைவில் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் 31.12.2021 முதல் 02.01.2022 ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதிக்கப்படுகிறது. பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' என தெரிவித்துள்ளார். குற்றலாம் மட்டுமின்றி இன்னும் பல சுற்றுலா மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை கூடிய விரைவில் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

click me!