தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஜாக்பாட்.. ஈசியா கவர்மெண்ட் வேலை கிடைச்சிடும்..

By manimegalai aFirst Published Sep 25, 2021, 7:02 PM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழித்தாளில் 45 மார்க் எடுத்தால் மட்டுமே பொதுத்தேர்வுகள் திருத்தப்படும் என்ற புதிய விரைவில் வர உள்ளது.

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழித்தாளில் 45 மார்க் எடுத்தால் மட்டுமே பொதுத்தேர்வுகள் திருத்தப்படும் என்ற புதிய விரைவில் வர உள்ளது.

கால் காசு என்று என்றாலும் கவர்மெண்ட் உத்தியோகம்… அரைக்காசுன்னாலும் அரசாங்க வேலை வேண்டும் என்ற பேச்சுக்கு இன்றும் தமிழகத்தில் மதிப்பு இருக்கிறது. காரணம் அரசாங்க வேலை என்பதின் தாக்கமும், அதன் பலன்களும் அப்படி.

ஆனால் தற்போதுள்ள சூழலில் அரசாங்க உத்தியோகம் பெற போட்டி தேர்வு உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளை கடந்து போக இருக்கிறது. குறிப்பாக தமிழக அரசு பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்படும்.

கொரோனா காலம் என்பதால் சமீப காலமாக திட்டமிட்டப்படி தேர்வுகள் நடத்த முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பல்வேறு பணிகளுக்கான போட்டி தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதிலும் முக்கியமாக குரூப் 2, குரூப் 2A. குரூப் 4 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் தமிழ் வழியில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. அதற்கான புதிய நடைமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த முறை அமல்படுத்தப்பட்டால் தமிழ் தாளில் 45 மதிப்பெண்கள் பெற வேண்டும். அப்படி எடுத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட தேர்வாளரின் பொது தேர்வு தாள் திருத்தப்படும். விரைவில் அறிவிக்கப்பட உள்ள போட்டி தேர்வுகளில் இந்த முறை கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

click me!