ஆசிரியை மகாலட்சுமி மாலையில் பணியிடை நீக்கம்.. 6 மணி நேரத்தில் சஸ்பெண்ட் வாபஸ் பெறப்பட்ட பின்னணி..!

By vinoth kumarFirst Published Sep 25, 2021, 11:47 AM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள, அரசவெளி கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி இடைநிலை ஆசிரியராக மகாலட்சுமி என்பவர் பல வருடங்களாக பணியாற்றி வருகின்றார். 

திருவண்ணாமலையில் அரசு பழங்குடியினர் நல பள்ளி ஆசிரியர் மகாலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 6 மணிநேரத்தில் மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்தப்பட்டார். 

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள, அரசவெளி கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி இடைநிலை ஆசிரியராக மகாலட்சுமி என்பவர் பல வருடங்களாக பணியாற்றி வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் நலனுக்கா பல நன்மைகளும் மலைவாழ்மக்கள் பள்ளியில் பயில மாணவர்கள் வராத நிலையில் இவர் தனிமனிதராக ஐவ்வாதுமலையில் உள்ள மலைவாழ் மக்களிடம் பேசி அவர்களுடைய பிள்ளைகளை சேர்பதற்கு பல முயற்சிகளை எடுத்து பள்ளியில் மாணவர்களை சேர்த்தார்.

இவர் கடந்த 14 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மலைவாழ் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். மாணவர்களுக்கு கல்வியுடன், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்டவற்றையும் கற்பித்து ஆசிரியர் பணியில் முன்மாதிரியாக திகழ்கிறார். தன்னுடைய ஊதியம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் திறட்டப்பட்ட நிதியை கொண்டு மாணவர்களுக்கு தேவையான வசதிகளை பள்ளியில் அவர ஏற்படுத்தியது பலராலும் பாராட்ட பெற்றது. பள்ளி குழந்தைகளுக்காகவே தன்னை அர்பணித்துக்கொண்டு  ஆசிரியை மகாலட்சுமி தான் ராட்சசி திரைப்படத்தில் ஜோதிகாவின் கதாபத்திரமாக உருவானதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், பள்ளியில் மேம்பாட்டுக்காக தன்னிச்சையாக நிதி திரட்டியது, கொரோனா கால கட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஆசிரியை மகாலட்சுமி திடீரென தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அடுத்த 6 மணிநேரத்தில் மகாலட்சுமியின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆசிரியை மகாலட்சுமியின் கல்வி சேவையை பாராட்டி  அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளும் விருதுகள் வழங்கி கவுரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

click me!