திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் நேற்று 5 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர் என மொத்தம் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அப்பள்ளிக்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் நேற்று 5 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர் என மொத்தம் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
undefined
இந்நிலையில், இன்று செங்கம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சாத்தனூர் அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பு ஆசிரியருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியருக்கு தொற்று உறுதியானதால் மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.