தலை நசுங்கி பிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரணி அருகே கணவனுடன் சென்ற 7 மாத கர்ப்பிணி பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர். இவருடைய மனைவி பிரியா (22). இவர்களுக்கு சுஜித் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாபு தனது மனைவி பிரியா மற்றும் மகன் சுஜித் ஆகியோருடன் நேற்று நெடுஞ்சாலையில் குண்ணத்தூர் கூட்ரோடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
undefined
அப்போது, எதிர்பாராத விதமாக வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பின்னால் உட்காந்திருந்த பிரியா கீழே விழுந்துள்ளார். அவரது பின்னால் வேலூரிலிருந்து ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்தின் பின்சக்கரத்தில் பிரியா சிக்கினார். இதில், தலை நசுங்கி பிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 மாத கர்ப்பிணி மனைவி உடலை பார்த்து கணவர் கதறிய காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது.