குலதெய்வ கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
குலதெய்வ கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் செங்கம் அடுத்த புதூர் மாரியம்மன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த லாரி மீது மோதியது.
undefined
இந்த விபத்தில் காரில் இருந்த 3 மாத குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 6 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.