குழந்தைகள் கண்ணெதிரே பயங்கரம்.. ஒரே சேலையில் தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை.. நள்ளிரவில் கதறல்..!

Published : Jul 01, 2021, 05:56 PM ISTUpdated : Jul 01, 2021, 06:05 PM IST
குழந்தைகள் கண்ணெதிரே பயங்கரம்.. ஒரே சேலையில் தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை.. நள்ளிரவில் கதறல்..!

சுருக்கம்

நள்ளிரவில் திடீரென கண்விழித்து பார்த்தபோது தாயும், தந்தையும் வீட்டில் உள்ள பேனில் ஒரே சேலையில் தொடங்கிய நிலையில் இருப்பதை கண்டனர். தூக்க கலக்கத்தில் இருந்த இரு குழந்தைகளும் பெற்றோரை அழைத்து பார்த்தனர். ஆனால், பதில் ஏதும் கூறாததால் இருவரும் கதறி அழுதனர்.

கண்ணமங்கலம் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (36). ஜேசிபி இயந்திரம் ஓட்டுராக உள்ளார். இவரது மனைவி இந்துமதி (34). இவர்களுக்கு  உமாதேவி (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு, கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் தூங்கச்சென்றனர். 

இந்நிலையில், நள்ளிரவில் திடீரென கண்விழித்து பார்த்தபோது தாயும், தந்தையும் வீட்டில் உள்ள பேனில் ஒரே சேலையில் தொடங்கிய நிலையில் இருப்பதை கண்டனர். தூக்க கலக்கத்தில் இருந்த இரு குழந்தைகளும் பெற்றோரை அழைத்து பார்த்தனர். ஆனால், பதில் ஏதும் கூறாததால் இருவரும் கதறி அழுதனர். நள்ளிரவில் குழந்தைகளின் அழுகுரல் கேட்ட  அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் குடும்ப தகராற காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவன், மனைவி தூக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?