திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திக (29). முதுநிலை பயற்சி மருத்துவர். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கு சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து சீமந்தம் நடத்தியதாக கூறப்படுகிறது. கொரோனா 2வது அலை அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மருத்துவர் கார்த்திகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
undefined
எனினும் கணவர் வீட்டார் வற்புறுத்தலின் பேரில் அந்த நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவர் கார்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு, உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதால், வானகரம் அப்போல்லோ மருத்துவனையில் இருந்து கடந்த 19-ம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.