வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் மூலமாக 43 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் மூலமாக 43 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பிப்ரவரி மாதம் குறைந்திருந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வீட்டிற்குள் இருந்த மக்களை வீதிக்கு வரவழைத்து, பாதிப்பு தற்போது பல மடங்கு அதிகரித்து விட்டது. கொஞ்சம் தாமதமாக தேர்தலை அறிவித்திருந்தால் இந்த அளவுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டிருக்காது. கொரோனா 2ம் அலை தீவிரமாக உள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது கிராமங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ரேஷன் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, ரேஷன் கடை மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர், ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கியவர்கள் அவர்களிடம் நெருக்கமாக பழகியவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராமத்திற்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளனர்.