அரோகரா கோஷம்... அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு..!

By vinoth kumar  |  First Published Apr 14, 2021, 5:51 PM IST

திருவண்ணாமலை கிரிவல்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது. 


திருவண்ணாமலை கிரிவல்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது. 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதப்பிறப்பின் முதல் நாளன்று, திரு நேர் அண்ணாமலையார் மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம். 

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி, சித்திரை மாத முதல்நாளான இன்று அதிகாலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு காலை 7 மணிமுதல் 7.10 மணி வரை நடைபெற்றது. அப்போது, திருநேர் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடைபெற்றது. 

கொரோனா காரணமாக பக்தர்கள் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிப்படவில்லை. ஆகையால், சூரிய ஒளி விழுவதை பக்தர்கள் காண வசதியாக, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அகண்ட திரை வைக்கப்பட்டு, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

click me!