அடிதூள்.. திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை தமிழகத்தின் 2வது எஸ்.ஐ.யாக தேர்வு.. முதல்வர் கையால் பணியாணை.!

By vinoth kumar  |  First Published Jul 31, 2021, 11:12 AM IST

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி இந்தியாவிலேயே முதல்முறையாக சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டு திருநங்கைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திருந்த நிலையில், தற்போது 2வததாக  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சிவன்யா போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வவேல். இவரது மனைவி வளர்.  சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மகள் திருநங்கை சிவன்யா (31) பி.காம்., பட்டதாரி. 2 ஆண்டுகளுக்கு முன் செல்வவேல் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனையடுத்து, திருவண்ணாமலையில் தனியார் போலீஸ் பயிற்சி மையத்தில் சிவன்யா படித்து வந்தார். இந்நிலையில், பெரும் போராட்டத்திற்கு இடையே படித்து வந்து தற்போது, எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் கையால் 26ம் தேதி பணியாணை பெற்றார்.

இது தொடர்பாக சிவன்யா கூறுகையில்;- சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த திருநங்கையான என்னை, குடும்பத்தினர் ஒதுக்கி வைக்காமல், அரவணைத்து வளர்த்தனர். முதலில் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் தன்னார்வலராக பணியாற்றி வந்தேன். பின்னர், காவலர் தேர்வுக்காக அந்த பணியை விட்டுவிட்டு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து விடாமுயற்சியுடன் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெற்றேன். தற்போது,, போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது. குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி.,யாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

click me!