கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில்;- கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
undefined
அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.