வேறொரு இளைஞருடன் தொடர்பு…? சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு நாடகாமடிய கணவன் கைது…!

By manimegalai a  |  First Published Sep 25, 2021, 11:52 AM IST

ராமநாதபுரம் அருகே கள்ளத் தொடர்பு சந்தேகத்தால் கட்டிய மனைவியை கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.


ராமநாதபுரம் அருகே கள்ளத் தொடர்பு சந்தேகத்தால் கட்டிய மனைவியை கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

 

Tap to resize

Latest Videos

undefined

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காலையில் ராதிகாவின் கழுத்தை நெறித்தும், பின்னர் தலையைனையை வைத்து அழுத்தியும் அவரை கொலை செய்துள்ளார் கணவர் மாடசாமி.

போலீஸிடம் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டிய மாடசாமி மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என 108 ஆம்புலன்ஸை வரவழைத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் பேரையூர் போலீசார் மாடசாமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தூரி கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் ராதிகாவுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக் சந்தேகம் எழுந்ததால் அவரைக் கொலை செய்ததாக மாடசாமி வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேகத்தால் மனைவியை கொன்றுவிட்டு கணவன் நாடகமாடிய சம்பவம் முதுகளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!