அட பாவிகளா... பேக்கரியில் வாங்கிய சமோசாவில் அரணை.. சாப்பிட்ட சிறுவனின் நிலைமை என்ன?

By vinoth kumar  |  First Published Aug 7, 2021, 3:32 PM IST

அங்கு  உள்ள ஒரு  தனியார் பேக்கரியில் சமோசாக்களை வாங்கி ஒரு பேப்பரில் பார்சல் செய்து வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்த பிறகு அந்த சமோசாவை சாப்பிக்கொண்டிருந்த போதே திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பேக்கரியில் வாங்கிய சமோசாவில் அரணை இருந்ததை பார்க்காமல் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மேலத்தில்லையேந்தலை சேர்ந்தவர் கார்மேகம் (36). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வாசுதேவன் 2ம் வகுப்பு படித்து படித்து வருகிறான். கொரோனா விடுமுறை என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில்  சில நாட்கள் இருந்து விட்டு நேற்று மாலை  சொந்த ஊர் திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்.

Latest Videos

undefined

அங்கு  உள்ள ஒரு  தனியார் பேக்கரியில் சமோசாக்களை வாங்கி ஒரு பேப்பரில் பார்சல் செய்து வீட்டுக்கு  கொண்டு வந்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்த பிறகு அந்த சமோசாவை சாப்பிக்கொண்டிருந்த போதே திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து,  சமோசாவில் அரணை பல்லி இருந்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சிறுவனை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!