குரூப் 1 தேர்வு... 92 இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்- டிஎன்பிஎஸ்சி தகவல்

By Ajmal Khan  |  First Published Aug 23, 2022, 11:13 AM IST

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் காலியாக உள்ள 92 பதவியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவர்களின் பெரும்பாலானவர்கள் அரசு பணியில் இணைய வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும், அந்த வகையில்,  அரசு ஊழியர்களை சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பதவிகளை பொறுத்து குரூப் 1 ,2,3,4 என தேர்வுகள் நடைபெறும், இந்தநிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.  

மாணவர்களே அலர்ட்..! 1 - 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. முழு தகவல்

Latest Videos

undefined

நேற்று இரவோடு விண்ணப்பிக்க காவ அவகாசம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து குரூப் 1 தேர்வில் கலந்து கொள்ள எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவலை  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், 92 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் மேற்கொள்ள ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி கால அவகாசம் வழங்கியுள்ளது.  குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழ்நாட்டில் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..! அதிர்ச்சியில் தொழிலதிபர்கள்


 

click me!