தமிழ்நாட்டில் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..! அதிர்ச்சியில் தொழிலதிபர்கள்

By Ajmal KhanFirst Published Aug 23, 2022, 10:35 AM IST
Highlights

சென்னை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள தோல் தொழிற்சாலைக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை சோதனை

நாடு முழுவதும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் முக்கிய தலைமை கழக நிர்வாகியான எஸ்.பி வேலுமணியின் நண்பர் கே.சி.சந்திர சேகர் வீட்டில் 7 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை மேற்கொண்டனர், அப்போது 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை, மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இதே போல பிரபல சினிமா பைனான்சியர்  அன்புச்செழியனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர்.

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு.. 6 பேருக்கு ஜாமீன் கொடுத்து அந்த 3 பேருக்கு நோ சொன்ன மாஜிஸ்திரேட்.!

தோல் தொழிற்சாலையில் சோதனை

இந்தநிலையில் பிரபல தோல் தொழிற்சாலை நடத்தி வரும் பரிதா மற்றும் கே.எச் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, வேலூர், ஆம்பூர், புதுச்சேரி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட  இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. பரிதா மற்றும் கே.எச் நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் 15க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை இயக்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பேக், ஷூ, பெல்ட் உள்ளிட்ட உயர் ரக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உரிய முறையில் வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.  வேலூர் மாவட்டம் பெருமுகை பகுதியில் உள்ள KH தனியார் காலணி தொழிற்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட 2 காரில் வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், பூந்தமல்லி, பெரியமேடு ஆகிய இடங்களில் உள்ள இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையின் முடிவில் வருமான வரித்துறையால் வரி ஏய்ப்பு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தமிழகப் பொருளாதாரத்தை சீரழிக்கும் பிடிஆர் தியாகராஜனின் ஈகோ, ஜாலப் பேச்சு: பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்

click me!