அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம்... விளக்கம் அளித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி!!

By Narendran S  |  First Published Mar 26, 2023, 11:28 PM IST

ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.  


ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர்.6 ஆம் தேதி நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் என மொத்தம் ஆயிரத்து 339 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய நிலையில் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.4000 லஞ்சம்... வசமாக சிக்கிய காவல் உதவி ஆய்வாளர்!!

Tap to resize

Latest Videos

அதில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 742 மாணவர்கள் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணியிடங்களில் தேர்ச்சி பெற்றனர். காரைக்குடியில் 13 பயிற்சி மையங்களில் தேர்வு எழுதிய தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 302 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே மையத்தில் பயிற்சி பெற்ற 742 தேர்ச்சி பெற்றிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியதோடு இது இயற்கைக்கு மாறாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: தமிழக மருத்துவத்துறையில் உள்ள 1,021 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்... அமைச்சர் மா.சு உறுதி!!

இந்த நிலையில் இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 ஆள்சேர்க்கை அறிவிப்பின் போதே தட்டச்சு பிரிவில் இரண்டு higher முடித்தவர்களுக்கே தேர்வு முடிவுகளில் முன்னூரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மதிப்பெண் குறைந்தவர்கள் தட்டச்சர் பிரிவில் கிடைத்த முன்னூரிமையால் தரவரிசையில் முன்னனி இடம் பிடித்துள்ளனர். நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.  

click me!