
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை வெளியிட்டது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றை உறுதி செய்வதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.
முன்னதாக சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கல்லூரி கலந்தாய்வு தேதி மாற்றமைக்கப்பட்டது. அதன்படி, இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்று திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க:4 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை.. ஸ்கெட்ச் போட்டு களமிறக்கிய வனத்துறை.. சிறுத்தை சிக்கிய பின்னணி
இந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 யில் தொடங்கி ஆக்டோபர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகள், கலந்தாய்வில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, தற்போது கலந்தாய்வில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய படிப்புகளில் சேர இடங்களை பெறுபவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், அந்த இடங்கள் காலியாக கருதப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:ஆக்ஸ்ட் 25 ல் பொறியியல் கலந்தாய்வு.. எப்போது வரை நடைபெறும்..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..
2022 - 23 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொது பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறுகின்றன. எனவே கிராமப்புறங்களில் மாணவர்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள,110 பொறியியல் மாணவர் சேர்க்கை மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் கலந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.