நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரக்கோடு பகுதியில் சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டு விட வனத்துறை முடிவு செய்துள்ளது.
உதகை வடக்கு வன சரகத்திற்குட்பட்ட அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வட மாநில தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாந்த என்பவரது 4 வயது சரிதா தேயிலைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை, குழந்தை சரிதாவை தாக்கியது.
மேலும் படிக்க:சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐ.ஐ.டி. மாணவி..!
இதில் படுகாயமடைந்த சரிதாவை, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து சிறுத்தை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அங்குள்ள தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் அரக்காடு பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
மேலும் படிக்க:உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கல்லூரி மாணவி.. வெளியான பரபரப்பு தகவல்
சில இடங்களில் பொருத்தப்பட்டுருந்த கேமிராவில், சிறத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வனத்துறையினரால் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து , சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. 10 கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, 2 கூண்டு வைக்கப்பட்ட சிறுத்தை பிடிக்க வனத்துறை தயாராக இருந்த நிலையில், இன்று அதிகாலை சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இன்று மாலை அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்படவுள்ளது.