கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்… எச்சரிக்கை விடுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர்!!

By Narendran SFirst Published Aug 12, 2022, 5:20 PM IST
Highlights

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நாளை (சனி), ஞாயிறு மற்றும் ஆக.15ம் தேதி (திங்கள்) வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் பயண கட்டணத்தை கடுமையாக உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: லுங்கி அணிந்து கமிஷ்னர் அலுவலகம் வருவதற்க்கு தடையா..? ஜெய்பீம் ராஜகண்ணு உறவினருக்கு அனுமதி மறுத்த காவல்துறை

மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக ரூ.1,400 வரையில் இருந்த பயண கட்டணம் தற்போது ரூ.3,500 வரை உயர்ந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல பயணிகளின் கட்டணமானது ரூ.1,000ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் தொடர்ச்சியாக அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகளிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படிங்க: டிகிரி முடித்தால் போதும்..தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு !

இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

click me!