லுங்கி அணிந்து கமிஷ்னர் அலுவலகம் வருவதற்க்கு தடையா..? ஜெய்பீம் ராஜகண்ணு உறவினருக்கு அனுமதி மறுத்த காவல்துறை

By Ajmal KhanFirst Published Aug 12, 2022, 5:09 PM IST
Highlights

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லுங்கி அணிந்து கொண்டு புகார் அளிக்க வந்தவரை காவல்துறை உள்ளே விடாமல் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லுங்கிக்கு அனுமதி இல்லையா..?

சென்னையில் நட்சத்திர விடுதியில் வேஷ்டி மற்றும் லுங்கிகள் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்படுவதும் அது பிரச்சனையாவதும் வாடிக்கையான ஒன்று அந்தவகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில்  முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அரி பரந்தாமன்  மற்றும் அவரோடு சில மூத்த வழக்கறிஞர்களும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்திற்குள் சென்றுள்ளனர், அப்போது, வேட்டி அணிந்து இருந்தனர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனுமதி ரத்து- எச்சரிக்கை

இதனையடுத்த தமிழக சட்டமன்றத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. அப்போது முதலமைச்சாரக இருந்த ஜெயலலிதா, வேட்டி அணிந்தவர்களை சங்க கட்டட வளாகத்திற்குள் அனுமதிக்காத தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தின் செயல்பாடு, தமிழர் நாகரிகத்தையும், தமிழர் பண்பாட்டினையும் இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்ற விதிகளுக்கும் முரணானதாகும் என தெரிவித்திருந்தார். மேலும்  தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் இனி வருங்காலங்களில் மன்றங்கள் ஈடுபடுமேயானால், அந்த மன்றங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் வேஷ்டி,கைலி கட்டினால் அனுமதி மறுப்பதாக காவல்நிலையத்தில் புகார் கூற செல்லுவார்கள், ஆனால் புகார் கூற வரும்  இடத்திலேயே கைலிஒஅணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லையென்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் தண்ணீர் பம்பை மறைத்து கால்வாய் கட்டியவர் அதிமுகவை சேர்ந்தவர்...! துரைமுருகன் கூறிய பரபரப்பு தகவல்

சாமானியர்களுக்கு அனுமதி இல்லையா..?

வேப்பேரியில் உள்ள சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஜெய்பீம் கதையின் உண்மையான ராஜாகண்ணுவின் உறவினர் குளஞ்சியப்பன் புகார் ஒன்றை  அளிக்க வந்துள்ளார். அப்போது குளஞ்சியப்பன் லுங்கி கட்டியிருந்ததால் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்துள்ளனர்.  இதனையடுத்து கமிஷ்னர் அலுவலகம் எதிரே இருந்த  பெரியார் திடலில் உள்ள எஸ்.எம். சில்க்ஸில் வேட்டி ஒன்றை வாங்கி அணிந்துக் கொள்ள செய்த பிறகு ஆணையர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லுங்கி என்பது தமிழகத்தில் சாமானிய மக்கள் அணியும் உடையாக உள்ளது. பெரும்பாலன மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது லுங்கி அணிந்து தான் செல்கின்றனர். தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் லுங்கி அணிந்து தான் வீட்டில் இருப்பார்கள், முக்கிய விருந்தினர்களையும் சந்தித்துள்ளனர்.

அப்படி உள்ள நிலையில் பாதுகாப்பு கொடுக்க கூடிய காவல் ஆணையர் அலுவலகத்திலேயே லுங்கிக்கு அனுமதி மறுத்த சம்பவம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும் லுங்கி அணிந்து வரும் சாமானிய மக்கள் கமிஷ்னர் அலுவலகம் வரக்கூடாதா? உடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க இது என்ன நட்சத்திர விடுதியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்

தேசிய கொடியை ஏற்றினால் மட்டும் நாம் நல்ல குடிமகனாக ஆகி விடமாட்டோம்..! கவிஞர் வைரமுத்து

 

click me!