
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளன. இரண்டு பெரும் நடிகர்களின் படங்கள் பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் கட்டவுட் மற்றும் பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த 2 படங்களும் வெளியாவதற்கு முன்பே தமிழக அரசு அதிகாலை சிறப்பு காட்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!
இதை அடுத்து கூடுதல் காட்சிக்கு அனுமதி அளிக்க கோரி திரைப்பட விநியோகஸ்தர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தமிழக அரசு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை! முழு விபரம் இதோ
திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜன.12, 13 மற்றும் 18 ஆம் தேதி ஆகிய தேதிகளில் மட்டும் வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையி்ல் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.