TASMAC : மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை! முழு விபரம் இதோ

By Raghupati R  |  First Published Jan 11, 2023, 10:12 PM IST

டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசால் டாஸ்மாக் ஒயின்ஷாப் நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என பல்வேறு பண்டிகைகளில் டாஸ்மாக்கின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அணைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்த்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவைகள் அனைத்தும், 16. 01. 2023 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26. 01. 2023(குடியரசு தினம்) தினத்தன்று மூடிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி விதிகள்) 1981-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

எனவே, மேற்படி நாட்களில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபானகடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் FL1/FL2/FL3/FL3A/FL3AA/FL11 உரிமம் உள்ள பார்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள மது விற்பனையகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும். அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நாளில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள். விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், மது கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரும் இதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!

இதையும் படிங்க..தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யணும்.. ஆளுநருக்கு பாதுகாப்பே இல்லை! இவரே இப்படி சொல்லிட்டாரு.!!

click me!