ஐபிஎஸ் அதிகாரிகள் 21 பேர் இடமாற்றம்... அதிரடி உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Jan 11, 2023, 5:27 PM IST
Highlights

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 21 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 21 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: இலவச மின் இணைப்பு: 50,000வது இணைப்பை விவசாயிக்கு நேரில் வழங்கிய முதல்வர்

சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அசீஷ் ராவத்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: திராவிடர் கழக நிர்வாகி வீட்டு வேப்ப மரத்தில் 3 மாதமாக வடியும் பால்; பொதுமக்கள் வழிபாடு

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்றப் பதிவுப் பணியகம் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!