இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்தா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது என்ன ?

Published : Jul 15, 2022, 09:29 PM IST
இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்தா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது என்ன ?

சுருக்கம்

விலையில்லா மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தனது  தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது. 

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அப்போதைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா,  அம்மா மடிக்கணனி திட்டத்தை தொடங்கி வைத்ததார். ரூ. 10,200 கோடி நிதியில் 2011-16 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு 6.8 மில்லியன் (68 லட்சம்) மாணவர்களுக்கு (கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் சேர்த்து) மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டது. 2019ம் ஆண்டு வரையில்  38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாக கூறப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக உலகாளவிய  உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. இதன், காரணமாக இதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக அரசின் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளன.

விலையில்லா மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மடிக்கணினிகள் விநியோகிக்க முடியாத நிலையில், அவை பள்ளிக்கல்வித்துறையிலேயே தேங்கிக் கிடக்கிறது. முந்தைய ஆண்டுகளில் மாணவர்களுக்கு வழங்கியதுபோக 55,819 மடிக்கணினிகள் பள்ளிகளின் கையிருப்பில் உள்ளன. 

மேலும் செய்திகளுக்கு..நான் பணக்காரி இல்லை.. ஒன்றரை கோடி காரை மகனுக்கு பரிசாக கொடுத்த ரோஜா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

இதற்கிடையே ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கூடுதலான மடிக்கணினிகள் தேவைப்படுவதால், பள்ளிகளில் கையிருப்பில் உள்ள மடிக்கணினிகளை கணினி ஆய்வகங்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனுமதி வழங்கினார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் (தொழிற்கல்வி) ஜெயக்குமாரும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ‘, ‘இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது. ஆனால் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சிக்கல்களுக்கு தீர்வு கண்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம். இதனால் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யவில்லை. நிதிநிலையை ஆராய்ந்து படிப்படியாக மடிக்கணினி வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!