எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !

By Raghupati R  |  First Published Jul 15, 2022, 2:43 PM IST

முதுகலை எம்.ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், சாதி பற்றி சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


சேலம் மாவட்டம், கருப்பூரில் செயல்பட்டு வருகிறது பெரியார் பல்கலைக்கழகம். 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழகத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றது.

இந்நிலையில் முதுகலை எம்.ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், சாதி பற்றி சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய கேள்வியானது, தமிழ்நாட்டில் உள்ள நான்கு சாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அதில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்டுள்ளது.  

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

சர்ச்சைக்குரிய அந்த வினாத்தாளில் மஹர், நாடார், ஈழவர், அரிஜன் ஆகிய சமூக பிரிவுகளை குறிப்பிட்டு இவற்றுள் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டு வரை  என்கிற தலைப்பில் எம்.ஏ.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வில் இந்த கேள்வி இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

சாதி ஒழிப்பில் ஈடுபட்ட பெரியார் பெயரில் இயங்கும் இப்பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்கிற அடிப்படையில் சாதிகளை குறிப்பிட்டு கேள்வி தமிழகத்தில் கல்வி நிலையங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஏற்படக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது பெரியார் பல்கலைக்கழக  விவாதத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. 

இதுகுறித்து விளக்கம் அளித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், ‘வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை.. இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

தற்போது தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை குறித்த விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப் பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம் பெற்றது குறித்து உயர் கல்வி துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கைலாசா ஆண்டவர் மீண்டும் வருகிறார்.. நித்யானந்தா ரிட்டர்ன்ஸ்.! பக்தர்களே ரெடியா.!

click me!