பெரியார் பல்கலைக் கழகத்தில் சாதி தொடர்பான கேள்வியா..? இது தான் சமூக நீதியா கொந்தளித்த அண்ணாமலை

Published : Jul 15, 2022, 01:02 PM IST
பெரியார் பல்கலைக் கழகத்தில்  சாதி தொடர்பான கேள்வியா..? இது தான் சமூக நீதியா கொந்தளித்த அண்ணாமலை

சுருக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்டது தவறானது,  வன்மையாக கண்டிக்கத்தக்கது  எனவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

திமுக-பாஜக மோதல்

திமுக-பாஜக இடையே கடுமையான கருத்து மோதல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது. திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டி வருகிறார். இந்தநிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சாதி இல்லை, மதம் இல்லை என்று போராடிய பெரியார் பல்கலைக்கழகத்தில் இது போன்ற கேள்வி கேட்டது ஆச்சரியப்படவைத்தது. இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பெருந்தலைவர் காமராசரின் 120 வது பிறந்த நாளையொட்டி, பா.ஜ.க சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராசர் சிலைக்கு அக்கட்சியின்  மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது.? பெரியார் பல்கலை. தேர்வின் கேள்வியால் சர்ச்சை...! கட்சி தலைவர்கள் ஆவேசம்

சின்னவர் என என்னை கூப்பிட்டால் பலருக்கு வயிற்றெரிச்சல்...! எதிர்கட்சிகளை கலாய்த்த உதயநிதி

சாதி தொடர்பான சர்ச்சை கேள்வி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த  அண்ணாமலை,  காமராஜர் மணிமண்டபத்தில் பழுது பார்க்கும் பணிக்காக மக்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதி வசூலித்து, மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழக அரசிடம் வழங்க உள்ளதாகவும் கூறினார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதி குறித்த கேள்வி நிச்சயம் தவறானது எனவும், திமுக ஆட்சியில் சமூக நீதியை குறித்து பேசுகிறார்கள் அதே வேளையில் இது போல கேள்விகளை கேட்கிறார்கள் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிகார திமிர் தமிழக அமைச்சர்களுக்கு வந்திருக்கிறது என்றும், அதிகார மமதையில் இருக்கிறார்கள் எனவும் விமர்சித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ஜனாதிபதி தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
 

இதையும் படியுங்கள்

நேர்ல வர முடியல.. கண்டிப்பாக ஃபங்ஷனுக்கு வந்துடுங்க.. கொரோனா பாதிப்பிலும் பிரதமரை அழைத்த முதல்வர்

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Tamil News Live Updates 07 December 2025: கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்