வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை.. பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..

By Thanalakshmi V  |  First Published Jul 1, 2022, 1:21 PM IST

தமிழகத்தில் வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார். மேலும் பக்ரீத் பண்டிகையன்று தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 


பக்ரீத் பண்டிகை:

வரும் ஜூலை 10 ஆம் தேதி தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனையடுத்து அன்று பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:சொந்த தொகுதியிலேயே எடுபடாத ஓபிஎஸ்..! எடப்பாடிக்கு எதிராக 7 நிமிடத்தில் முடிந்த போராட்டம்

மேலும் படிக்க:தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..

மேலும் படிக்க:சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்..! அதிரடி நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை

அரசு பொது விடுமுறை:

இந்நிலையில் ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை இன்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சூடுபிடிக்கும் செம்மறியாடு விற்பனை:

பக்ரீத் பண்டிகையையொட்டி, ஆடுகள் குர்பனி கொடுக்கப்பட்டு இறைச்சிகள் பகிர்ந்தளிப்பது வழக்கம். மேலும் அந்நாளில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் வழக்கம். இந்நிலையில் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் மற்றும் செம்மறியாடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற மேலப்பாளையம் கால்நடை விற்பனை சந்தையில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே போல் திருப்பூரில் குர்பானி கொடுப்பதற்காக பெரிய அளவிலான செம்மறியாடுகள் வர தொடங்கியுள்ளது.
 

click me!