மக்களே உஷார்!! இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு.. எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு உயர்வு..?

By Thanalakshmi VFirst Published Jul 1, 2022, 11:59 AM IST
Highlights

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. 
 

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் ஜூலையில் சுங்க கட்டணம் உயர்த்த அனுமதியுள்ளது. மேலும் நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று முதல் நாவலூர் சுங்கசாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், இன்று கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னதாக இதுக்குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:திமுகவிற்கு குட்பாய்? மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்..?

மேலும் படிக்க:கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடியா..? அதிமுக கவுன்சிலரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

மேலும் படிக்க:ஓபிஎஸ் வீட்டு வாசலில் குடுகுடுப்பைக்காரர்கள்.. இனி அவருக்கு நல்ல நேரம் தானாம்.. ஜக்கம்மாவே சொல்லிட்டாங்க.!

இதன்படி தற்போது கார்களுக்கு கட்டணம் ரூ.30 யிலிருந்து ரூ.33 ஆகவும் இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.49யிலிருந்து ரூ.54 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.11-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்துக்கான கட்டணம் ரூ.78-ல் இருந்து ரூ.86-ஆகவும், சரக்கு வாகனங்களுக்கு ரூ.117-ல் இருந்து ரூ.129-ஆகவும், பல அச்சு வாகனத்திற்கு ரூ.234-ல் இருந்து ரூ.258-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

click me!