தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் - கொங்கு மக்கள் முன்னணி கோரிக்கை

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக மேற்கொண்டு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கொங்கு மக்கள் முன்னணி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு  தனி ஆணையம் அமைத்து, அரசு  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதோடு, அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் சட்டப்பூர்வமாக நிலைபெற செய்ய முடியும். இந்தியாவில் முதன் முதலில் பீகார் மாநில அரசு சாதி வாரிமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்து உள்ளது.

இந்தியாவிலேயே சமூகநீதிக்கு முன் மாதிரி மாநிலமாக இருந்து வந்த தமிழ்நாடு இப்போது சமூக நீதிக்கான முன்னெடுப்பை மற்ற மாநிலங்கள் கையிலெடுத்த நிலையில் தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூக நீதிக்கு எதிரானது.  

Latest Videos

தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி, மாடு ரயில் மோதி உயிரிழப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆண்டாண்டு காலமாகப் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும், வாய்ப்பையும் அச்சமூகத்தையே அளவீடாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் உறுதிபடுத்துவதே உண்மையான சமூக நீதியாகும். இத்தகைய இட ஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, சாதி வாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, சான்றுகளோடும், தரவுகளோடும் அதனை நிலைபெறச் செய்வதோடு, அனைத்து தமிழ்ச்சமூகங்களுக்குமான இடஒதுக்கீட்டை மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில்  பகிர்ந்தளிக்க வேண்டும்.  

கோவையில் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு ஓடிய ஆட்சியர், ஆணையாளர்

சாதி வாரிக்கணக்கெடுப்பின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பது தான் கொங்கு மக்கள் முன்னணியின் நிலைப்பாடு, அதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த தேர்தலில் திமுகவும் அதனை தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆகவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட  வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அவசியத்தை  அரசுக்கு அறிய செய்ய  கொங்கு மக்கள் முண்ணனி  சார்பாக தமிழ்நாடு முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில்  கோரிக்கை ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!