இன்றும் ஒரு ஆச்சரியம்…. கொரோனாவின் லேட்டஸ்ட் நிலவரம் இதோ…

By manimegalai aFirst Published Oct 11, 2021, 8:41 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று 1303 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழகத்தில் இன்று 1303 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இது குறித்து இன்று வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பின் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் 1303 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26, 79,568 பேராக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 1428 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 1,39,836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இன்னமும் 15,992 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

click me!