TN Agri Budget 2022: டிஜிட்டல் விவசாயம்; விவசாயிகளை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தும் 10 அம்சங்கள் :முழுவிவரம்

Published : Mar 19, 2022, 01:57 PM IST
TN Agri Budget 2022: டிஜிட்டல் விவசாயம்; விவசாயிகளை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தும் 10 அம்சங்கள் :முழுவிவரம்

சுருக்கம்

TN Agri Budget 2022: விதை முதல்விளைச்சல் வரை அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் பதிவேற்றும் செய்து தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் வேளாண் திட்டம் தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

விதை முதல்விளைச்சல் வரை அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் பதிவேற்றும் செய்து தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் வேளாண் திட்டம் தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தமிழக அரசு தனது 2-வது மற்றும் முழுமையான  வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியதாவது:

தமிழக வேளாண் துறையும் மின்னணு திட்டத்தை வரும் நிதியாண்டு முதல் செயல்படுத்துகிறது. விதை முதல் விளைச்சல் வரை அனைத்து விவரங்களையும், தேவைகளையும் உழவன் செயலி மூலம் விவசாயிகள் பெற முடியும். விளைநிலைங்கள் வாரியாக, விதைப்பு முதல் விற்பனை வரை அனைத்துவிவரங்களையும் விவசாயிகளுக்கு மின்னணு முறையில் தெரிவிக்கப்படும்.

1.    விளைநிலங்கள் வாரியாக பயிர்திட்டம் தயாரிக்க அனைத்து புல எண்களுக்கும் புவி குறியீடு வழங்கப்படும். நில உரிமை தாரர்களின் விவரங்கள், மண்வளம், சாகுபடி விவரங்கள் இணைக்கப்படும். தமிழக்கத்தில் உள்ள 7 வேளாண் மண்டலங்கள், 1330 குறு மண்டலங்களாக பகுக்கப்பட்டு, புதிய சாகுபடித்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

2.    தமிழக மின்னணு ஆளுமை முகமை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பூச்சி மற்றும் நோய்கள் குறித்து செயற்கை நுண்ணறிவு வசதியுடன் விவசாயிகளுக்குஉடனுக்குடன் பயிர்பாதுகாப்பு குறித்து எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

3.    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், ட்ரோன் கழகத்துடன் இணைந்து, 7 உழவர் பயிறச்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சி கொல்லி தெளித்தல், விளைச்சலைப் பார்வையிடுதல் போன்றவை செய்யப்படும்.

4.    தானியங்கி முறையில் பயிர்களுக்கு நீர்பாய்ச்சுதல், நீர்வழி உரமிடுதல் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்படும் இதற்காக வேளாண், தோட்டக்கலை அரசுப்பண்ணைகளில் உரிய வசதிகள் செய்யப்படும்.

5.    விவசாயிகள் தங்கள் மண் வளம் குறித்து அறிய வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் மண்வளம் என்று தனி போர்டல் உருவாக்கப்படும். இதில் விவசாயிகள் தங்கள் நிலபுல எண் வாரியாக மண் வளத்தை தெரிந்து கொள்ளலாம்.

6.    ரிமோட் சென்ஸிங் மூலம் பயிர்கள் விளைச்சல், நில உடைமை, சாகுபடிப்பரப்பு ஆகியவை வேளாண் சந்தை நுண்ணறிவுப்புரிவு மூலம் கண்காணிக்கப்பட்டு விலைவிவரம் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும்.

7.    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனாளிகள் தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கநடவடிக்கை எடுக்கப்படும்.

8.    விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், கன்றுகள், பழமரச்செடிகள், தென்னை மரக்கன்றுகள் குறித்த தேவையை முன்கூட்டியே கணனி முறையில் பதிவு செய்து குறித்த நேரத்தில் தேவைக்கு ஏற்க வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்

9.    விவசாய கூலித்தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை நேரடியாகவோ அல்லது முகவர்கள் மூலமோ வட்டம், கிராமம் வாரியாக, திறன் அடிப்படையில் புதிய செயலியில் பதிவு செய்யலாம். இதன் கூலித்தொழிலாளர்களுக்கு வேளாண் சேவை நிறுவனங்கள் மூலம் தினசரி வேலை கிடைக்கும் உரிய பருவத்தில் வேளாண் பணிகளைச் செய்ய முடியும்

10.    வேளாண் மையங்களில் விவசாயிகள் இடுபொருட்களைப் பெறும்போது, ரொக்கத்துக்குப் பதிலாக இ-சலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.

இந்த திட்டம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் உதவியுடன் இந்த டிஜிட்டல் விவசாயத் திட்டம் செயல்படுத்தப்படும்
இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவி்த்தார்

PREV
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?
புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!