
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் சிறு தானிய மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், பயிறுவகைகள் சாகுபடிக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தனது 2-வது மற்றும் முழுமையான வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியதாவது:
சிறுதானிய மண்டலங்கள்
ஐ.நா. சபை 2023ம் ஆண்டை சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறு தானிய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இரு சிறு தானிய மண்டலங்கள் உருவாக்கப்படும். திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், தூத்துக்குடி,மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி,கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூ் ஆகிய மாவட்டங்களிலும் சிறு தானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்.
தன்னார்வலர்கள், நுகர்வோர்கள் பங்கேற்கும் சிறுதானிய திருவிழா மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நடத்தப்படும். சிறுதானியஉற்பத்தி ஊக்குவிப்புக்காக பட்ஜெட்டில் ரூ.92 கோடியும், சிறுதானிய சாகுபடி, உணவு ஆகிவற்றை மகளிர் குழுக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் 500 விவசாயிகளுக்கு ரூ.ஒரு கோடி நித ஒதுக்கப்படும்.
பயறு பெருக்குத் திட்டம்
துவரை உற்பத்தியை அதிகரிக்கவும், பயறு உற்பத்தியில் தன்னிறவு அடையும் வகையில் கிருஷ்ணகிரி, சேலம்,தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை அடக்கி துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.60 கோடி மத்திய அரசு மாநில அரசு பங்களிப்புடன் வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த பண்ணையம்
பயிர்சாகுபடியுடன் கறவை மாடு, ஆடு, நாட்டுக்கோழிகள், தீவணப் பயிர்கள், தேனி வளர்ப்பு, மண்புழு உரம், ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய வேளாண் பணிகளைச் சேர்த்து ஊக்குவிக்கும் வகையில், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கஊக்களிக்கப்படும். ஒரு பண்ணையம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியம் வீதம், 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்படும். இதற்காக ரூ.65.65கோடி ஒதுக்கப்படும்.
பருத்தி உற்பத்திக்கு உதவி
தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க நீடித்த நிலையான பருத்தி இயக்கம் செயல்படுத்தப்படும். ரூ.15.32 கோடி செலவில் மத்தியஅ ரசு உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மானாவரி நிலமேம்பாட்டு இயக்கம்
வறண்ட நிலத்திலும் வளமான பயிர்கள் வளர்வதற்காக மானாவரி நிலமேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் 7.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 3ஆயிரம் மானாவரி தொகுப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 3 லட்சம் மானாவரி விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் உயரும்
பயிர்காப்பீடு திட்டம்
கடந்த 2021-22ம் ஆண்டு பயிர்காப்பீடுதிட்டத்துக்காக தமிழக அரசு கடும் நிதிநெருக்கடிக்கு மத்தியிலும், ரூ.2,055 கோடியை 9.26லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கியது. 2022-23ம் ஆண்டில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட, ரூ.284 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்