சினிமாவை மிஞ்சும் வகையில் சேசிங்.. காதல் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்து எறிந்த தந்தை.. ஐசியூவில் காதலன்

By vinoth kumar  |  First Published Mar 19, 2022, 1:05 PM IST

 கார் மற்றும் டூவீலரில் வந்த 50க்கும் மேற்பட்டோர், காதல் ஜோடி வந்த காரை வழிமறித்து நிறுத்தி, கற்கள், கட்டைகள் கொண்டு கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி தாலியை அறுத்து எரிந்தனர். மேலும், அஜித்குமார் மற்றும் உறவினர்களை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு, சுஜிதாவை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்.


சினிமா பாணியில் காதல் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்து மணமகனை தாக்கிவிட்டு மணப்பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு

Tap to resize

Latest Videos

undefined

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அப்பநாயக்கன்பட்டி ஓணாங்கரடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (23), மெக்கானிக். கலர்காடு பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் மகள் சுஜிதா(19). பிளஸ் 2 படித்து விட்டு நீட் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த அஜித்குமாரும், சுஜிதாவும் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் சமரசம்

இதையடுத்து காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சேந்தமங்கலம் அருகேயுள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசி, கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, காதல் ஜோடிகளை ஒன்றாக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, அஜித்குமார் காதல் மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், திடீரென சுஜிதாவின் உறவினர்கள், அஜித்குமாருக்கு போன் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அஜித்குமார், காரை திருப்பிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்தனர். 

தாலியை அறுத்து எரிந்த தந்தை

அப்போது கார் மற்றும் டூவீலரில் வந்த 50க்கும் மேற்பட்டோர், காதல் ஜோடி வந்த காரை வழிமறித்து நிறுத்தி, கற்கள், கட்டைகள் கொண்டு கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி தாலியை அறுத்து எரிந்தனர். மேலும், அஜித்குமார் மற்றும் உறவினர்களை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு, சுஜிதாவை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அஜித்குமார் மற்றும் உறவினர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார், அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில், புதுமணப் பெண்ணை கடத்திச் சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!