தமிழ்நாடு மற்றும் புதுச்சேரில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியானது. இன்று காலை சரியாக 10 மணியளவில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.0% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.99 சதவீதமும், மாணவர்கள் 84.86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க:வெளியானது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இந்த முறையும் மாணவர்களை அடித்து தூக்கிய மாணவிகள்..!
பிளஸ் 1 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களில் 99.35 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுதும் 8,43,675 பேர் 11 ஆம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 7,83,160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க:இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி? இதோ முழு தகவல்..!
வேலுர் மாவட்டத்தில் 80.02 % பேர் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் வேலூர் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்று கடைசி இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 95.56 % மாணாக்கர்கள் தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் படிக்க:இனி தமிழகத்திலும் மாஸ்க் போடலைனா அபராதம்... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்த்து கொள்ளலாம். பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.