வெளியானது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இந்த முறையும் மாணவர்களை அடித்து தூக்கிய மாணவிகள்..!

By vinoth kumar  |  First Published Jun 27, 2022, 10:00 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10ம் தேதி  நடத்தப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 11ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், 11ம் பொதுத்தேர்வில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10ம் தேதி  நடத்தப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியானது. இந்நிலையில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு வெளியானது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Alert : சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் ஷாக்! ஜூலை 1 முதல் அமல் !

இதில், 8,83,882 பேர் எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 94.99 சதவீதம், 84.86 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டம்.. மாதந்தோறும் ரூ.1000.. ஒரே நாளில் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பம்..

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

click me!