இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி? இதோ முழு தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 27, 2022, 8:31 AM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10ம் தேதி  நடத்தப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர்.
 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 11ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10ம் தேதி  நடத்தப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர்.

இதையும் படிங்க;- ஓபிஎஸ்-க்கு அன்று நல்ல நேரம்... இல்லனா வேற மாதிரி போயிருக்கும்.. ஆதங்கம் படும் டிடிவி. தினகரன்..!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியானது. இந்நிலையில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று காவை 10 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க;- TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!

மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

click me!