Alert : சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் ஷாக்! ஜூலை 1 முதல் அமல் !

Published : Jun 27, 2022, 08:53 AM ISTUpdated : Jun 27, 2022, 08:54 AM IST
Alert : சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் ஷாக்! ஜூலை 1 முதல் அமல் !

சுருக்கம்

Toll plaza : ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க கட்டணம் உயர்வு

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூலையில் சுங்க கட்டணம் உயர்த்த அனுமதி உள்ளது. அதன்படி வரும் 1ம் தேதி முதல், இச்சாலையில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.தற்போது, கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் 30 ரூபாயில் இருந்து 33 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

ஜூலை 1 முதல் அமல்

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 49 ரூபாயில் இருந்து 54 ரூபாய்; பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கான கட்டணம் 78 ரூபாயில் இருந்து 86 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.உள்ளூர் கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான மாத கட்டணம் 350 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க : நான் மூன்றாம் கலைஞரா ? உஷார் ஆன உதயநிதி.. இனி என்னை இப்படி கூப்பிடுங்க போதும்!

இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!