#BREAKING: திருவள்ளூர் அருகே பயங்கரம்.. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் 3 பேர் உடல் சிதறி பலி!

By vinoth kumar  |  First Published Nov 19, 2023, 1:01 PM IST

சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் சென்றுக்கொண்டிருந்தது. ரயில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் மீது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர். 


திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் சென்றுக்கொண்டிருந்தது. ரயில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் மீது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர். இதில், ஒரு பெண்கள் உட்பட மூன்று பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உடனே இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேர் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  School College Holiday: நவம்பர் 24ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு.!
 

click me!