சென்னை டூ சபரிமலைக்கு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சிறப்பு ரயில்கள்.! முன் பதிவு எப்போது.?- தெற்கு ரயில்வே

By Ajmal Khan  |  First Published Nov 19, 2023, 10:43 AM IST

கார்த்திகை மாதத்தையொட்டி சபரிமலைக்கு செல்லும் வகையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிவிட்டனர். ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து கோட்டையத்திற்கும், கோட்டையத்திலிருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் விரதம்

உலக புகழ்பெற்ற சபரிமலையில்  ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதம் நேற்று முன் தினம் பிறந்தது. இதனையடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிவிட்டனர். 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

Tap to resize

Latest Videos

இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலை செல்வார்கள். பேருந்து, ரயில், வேன் மூலம் பக்தர்கள் சபரிமலைக்கு பயணிப்பார்கள். இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், 

சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோட்டையம் வரையும் கோட்டயத்தில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி (ரயில் எண் 06027) நவம்பர் மாதம் 19 மற்றும்  26 தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 3,10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. இதே போல கோட்டயத்தில் இருந்து (ரயில் எண் 06028) நவம்பர் மாதத்தில் 20, 27 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது இதே போல ஜனவரி 1ஆம் தேதியும் சிறப்பு ரயிலானது சென்னைக்கு இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு தொடங்கியது

இந்த சிறப்பு ரயிலில் 12 ஏசி பெட்டிகளும், 6 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளும், 2  முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்புரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர்,அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டையம் சென்று சேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

3 நாட்களுக்கு ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாது.! வெளியான அறிவிப்பு- ஏன் தெரியுமா.?

click me!