
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சேலம் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா ஆவடி காவல் ஆணையரகத்துக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த புத்தாண்டு அன்றும் கூட தமிழகத்தின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: அடேங்கப்பா இவ்வளவு வேகமா? எடப்பாடி பழனிசாமியின் காரை விடாமல் துரத்தும் நாய்!!
அப்போது தமிழகத்தில் மட்டும் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்த மக்னா யானை பிடிபட்டது
இதேபோல், சேலம் மாவட்ட காவல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி நஜ்மல் ஹோடா ஆவடி காவல் ஆணையரகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை ரயில்வே காவல் துறை டிஐஜியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆவடி காவல் சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.