பங்குனி மாத அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் எள்ளு பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினம் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று பங்குனி மாத அமாவாசை என்பதால் தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவதற்காக ராமேஸ்வரம் வருகை தந்துள்ளனர்.
undefined
ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி எள்ளு பிண்டம் வைத்து நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்திய பின்பு ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு. உள்ளே உள்ள 22 புனித திர்த்தங்களில் புனித நீராடி ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை முண்டியடித்துக் கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற நாட்களை காட்டிலும் இன்று அமாவாசை என்பதால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திப் உத்தரவின் பேரில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.