
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை காவல் துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். பொதுமக்கள் கலந்து செல்லாததால், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட, எஸ்.பி மகேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வித் திட்ட கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாகவும், நெல்லை ஆட்சியரான சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்து நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.