
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறு நாளாக போராடி வரும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளு கலவரமாக மாறி நிலவரம் மோசமானது
இதில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் இறந்தனர்.மேலும் இன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் இறந்துவிட்டார்.
இன்று அண்ணா நகரில் நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில், காளியப்பன் என்ற 22 வயதான இளைஞன் உயிரிழந்தார்.
அவரது உடலின் அருகே சென்ற போலீசார், எழுந்து போ..சும்மா நடிக்கிறான் ..என கிண்டலாக பேசி உள்ளனர்
இன்னொரு போலிசோ "ஏய் ரொம்ப நடிக்காதே போ என கூறி உள்ளனர். பின்னர் தான் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது அவர் உண்மையில் இறந்துவிட்டார் என்றார்.
அதுவரை அவர் ஏதோ அடிபட்ட மாதிரி கீழே விழுந்துள்ளார் என நினைத்து இவ்வாறு பேசி உள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடியில் தற்போது வரை பெரும் பிரச்சனையாகவே இருப்பதால், நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டத்தில் இணைய சேவையை முடக்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளது.
தவறான கருத்துக்கள் மற்றும் தூண்டுதலின் பேரில் பிரச்சனை வெடிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.