ஒரு மகன் சுட்டுக்கொலை; இன்னொரு மகன் காவல் துறையிடம்; தொடர்ந்து போராடும் வீரத்தாய்

 
Published : May 23, 2018, 08:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
ஒரு மகன் சுட்டுக்கொலை;  இன்னொரு மகன் காவல் துறையிடம்; தொடர்ந்து போராடும் வீரத்தாய்

சுருக்கம்

the mother of two still protesting for the solution

தமிழகத்தையே பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கும் ஸ்டெர்லைட் சம்பவத்தில், உயிரிழந்தோரின்­ எண்ணிக்கை இப்போது 13 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் பலியான அனைவருமே அப்பாவி பொது மக்கள்.

இந்த சம்பவத்தில் இளைஞர் முன்னணியை சேர்ந்த தமிழரசன் என்பவர், போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். 1996 ஆம் ஆண்டில் இருந்தே இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகிறார்.

நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது இவர் நெற்றியில் குறி வைத்து சுடப்பட்டிருக்கிறார். இந்த போராட்டத்தில் தமிழரசன் தனது அம்மா மற்றும் அண்ணனுடன் குடும்பமாக கலந்து கொண்டார்.

அவரின் அம்மாவின் கண் முன்னே தமிழரசன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், அவரது குடும்பத்தை மிகுந்த துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது அண்ணனையும் போலீசார் கைது செய்து இப்போது காவலில் வைத்திருக்கின்றனர்.

ஒரு மகன் கண் முன்னே கொல்லப்பட, இன்னொரு மகனை காவல் துறை கைது செய்ய, அந்த தாய் செய்வதறியாமல் துடித்த சம்பவம் கல்மனதையும் கரையச் செய்கிறது.

இப்போதும் கூட தமிழரசனின் அம்மா ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தனது மகனின் சடலத்தை வாங்க மறுத்து, மருத்துவமனை முன் போராடி வருகிறார். மக்களுக்காக போராடி வீர மரணமடைந்தவரின் வீரத்தாய், தானும் போராடாமல் வேறென்ன? செய்வார்.

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்