ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

By Raghupati RFirst Published Jul 26, 2022, 7:49 PM IST
Highlights

வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளார் மாவட்ட ஆட்சியர்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 ஆகஸ்டு 5 வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதையொட்டி அதிகாலை 5. 30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 

தொடர்ந்து காலை 6. 45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார்.   தொடர்ந்து மதியம் 12 தூய பனிமய மாதா அன்னைக்கு பொன் மகுடம் சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருவிழாவையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !

விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆக. 5-ந் தேதி பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.   திருவிழா ஏற்பாடுகளை பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான குமார் ராஜா, உதவி பங்குத்தந்தை பால் ரோமன், களப்பணியாளர் பெல்கிளின்டன், மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில்,  ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05. 08. 2022 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் 13. 08. 2022 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

click me!