வங்கிகளில் கோடிகளில் கடன் பாக்கி ; சென்னை தொழிலதிபர் ராகுல் சுரானா கைது! என்னவாகும் ரூ.8,045 கோடி கடன்!

By Dinesh TGFirst Published Jul 26, 2022, 3:25 PM IST
Highlights

பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் 8,045 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் சுரானா குழும தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சுரானாவை, தீவிர மோசடி விசாரணை பிரிவு (SFIU) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சுரானா குழுமம் IDBI வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், சுரானா குழும இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுராமா மற்றும் விஜயராஜ் சுரானா ஆகியோர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, 4 பேரையும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இவர்களைத்தொடர்ந்து, சுரானா குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சுரானா, 8,045 கோடி கடன் மோசடி வழக்கில் தீவிர மோசடி விசாரணை பிரிவு (SFIU) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

recession 2022:பொருளாதார மந்தநிலையின் பிடியில் ஆசிய நாடுகள்: தூண்டிலில் சிக்காத இந்தியா: இலங்கை நிலை மோசாகும்

ராகுல் சுரானாவின் ஷெல் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில் ரூ.8,045 கோடிக்கு மேல் கடன் வாங்கி, அவை செலுத்தப்படாமல் உள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தீவிர மோசடி விசாரணை பிரிவு (SFIU) அதிகாரிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!